இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வில்வித்தை வீரர் குழு உதவியாளருக்கு கொரோனா தொற்று
प्रविष्टि तिथि:
03 NOV 2020 5:01PM by PIB Chennai
தேசிய வில்வித்தை வீரர்கள் குழுவின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் தேசிய வில்வித்தை வீர ர்களுக்கான பயிற்சிமுகாம் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வில்வித்தை வீரர்களுடன் வந்த உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த அக்டோபர் 30-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
முகாமில் பங்கேற்பதற்கான கடந்த அக்டோபர் 7-ம் தேதி அந்த உதவியாளர் புனே வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தனிப்படுத்தப்பட்ட போது இந்திய விளையாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு முறைகளின்படி அவரிடம் இரண்டு முறை ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த உதவியாளர் புனேவில் உள்ள சிறப்பு கொவிட் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி முகாம் நிறுத்தப்பட்டது. மீண்டும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வில்வித்தை வீரர்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இரண்டு நாட்கள் அவர்கள் அறையில் இருந்து வெளியேறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உடல் வெப்ப நிலை கண்காணிப்புக்குப் பின்னர் பயிற்சி முகாம் கடந்த நவம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இந்திய விளையாட்டு ஆணையம், அனைத்து தேசிய முகாம்களில் பங்கேற்பவர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669785
**********************
(Release ID: 1669785 )
(रिलीज़ आईडी: 1669950)
आगंतुक पटल : 207