ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை திரு சதானந்த கவுடா நடத்தினார்
Posted On:
03 NOV 2020 5:42PM by PIB Chennai
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா, பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டமொன்றை புது தில்லியில் இன்று நடத்தினார்
இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (அக்டோபர் 31 வரை) ரூ 358 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்கப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் மொத்த விற்பனை ரூ 600 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019-20-ஆம் வருடம் இது ரூ 433 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திரு கவுடா, கடினமான கொவிட்-19 காலத்தில், மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட இதர மருத்துவப் பொருட்களை உரிய நேரத்தில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக இந்திய மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகத்தினரைப் பாராட்டினார்.
மக்கள், குறிப்பிடத்தக்க ஏழ்மையில் சமுகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள், மருந்துகளுக்காக செய்யும் செலவை குறைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை திரு கவுடா அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669797
----
(Release ID: 1669913)
Visitor Counter : 210