வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

முதலீடுகளுக்கான இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு இடையேயான கூட்டுப் பணிக்குழுவின் எட்டாவது கூட்டம் நடைபெற்றது

Posted On: 03 NOV 2020 5:21PM by PIB Chennai

முதலீடுகளுக்கான இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு இடையேயான கூட்டுப் பணிக்குழுவின் எட்டாவது கூட்டம் இந்தியாவால் இன்று நடத்தப்பட்டது. தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மெய்நிகர் முறையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகம் அமைச்சர் திரு பியுஷ் கோயல் மற்றும் அபுதாபி அமீரகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மேன்மைமிகு ஷேக் ஹமீது பின் சயீத் அல் நஹ்யன் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டுப் பணிக்குழு, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஏற்கனவே வலிமையாக உள்ள பொருளாதார உறவுகளை இன்னும் வலுப்படுத்துவதற்கான முக்கிய அமைப்பாகும்.

ஜனவரி 2017-இல் கையெழுத்திடப்பட்ட விரிவான கூட்டு ஒப்பந்தத்தை இரு நாடுகளும் வலுப்படுத்த நினைப்பதால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டுப் பணிக்குழுவில் சாதனைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளைக் குறித்து இரு தரப்பும் திருப்தி தெரிவித்தன.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டின் முக்கியத் துறைகளில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும், பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி, கூட்டுப் பணிக் குழுவின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை மேற்கொண்டு கட்டமைக்கவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669792

-----



(Release ID: 1669910) Visitor Counter : 178