நிதி அமைச்சகம்

வங்கிகள் விதிக்கும் சேவை கட்டணங்கள் குறித்த உண்மை நிலவரம்

Posted On: 03 NOV 2020 2:59PM by PIB Chennai

சில பொதுத் துறை வங்கிகளின் சேவை கட்டணங்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான உண்மை நிலவரம் பின்வருமாறு;

* ஜன் தன் கணக்குகள் உட்பட அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள்:

ஏழைகள் மற்றும் சமூகத்தின் வங்கி சேவைகள் சென்றடையாத பிரிவினர் தொடங்கிய 41.13 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளிட்ட 60.04 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்த இலவச சேவைகளுக்கு எந்த விதமான சேவை கட்டணமும் இல்லை.

* வழக்கமான சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள், பணக் கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்று கணக்குகள்:

இது தொடர்பான கட்டணங்கள் உயர்த்தப்படாத போதிலும், ஒரு மாதத்தில் செய்யக்கூடிய இலவச பண செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல்களின் எண்ணிக்கை தொடர்பான சில மாறுதல்களை 2020 நவம்பர் 1 முதல் பேங்க் ஆஃப் பரோடா செய்தது. இவை ஒரு மாதத்துக்கு ஐந்து முறை என்பதில் இருந்து மூன்று முறையாக குறைக்கப்பட்டன. எனினும், இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகான பரிவர்த்தனைகளுக்கானக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

கொவிட் தொடர்பான தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கண்ட மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா கூறியுள்ளது. மேலும், வெறெந்த பொதுத் துறை வங்கியும் இந்தக் கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தவில்லை.

கொவிட் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வங்கிக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இதர பொதுத் துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669751

**********************



(Release ID: 1669764) Visitor Counter : 251