ஆயுஷ்

தூக்கமின்மையை போக்கும் ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா சிகிச்சை

Posted On: 03 NOV 2020 12:31PM by PIB Chennai

தூக்கமின்மை பிரச்னைக்கு ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா சிகிச்சையில் தீர்வு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறதுதூக்கமின்மை பிரச்னை நீண்ட காலம் தொடர்ந்தால், அது ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சையில் தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கமின்மை மற்றும் அதனால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் பற்றி, ஆயுர்வேத சிகிச்சையில் நீண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் ஷில்லாங்கில் உள்ள ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி வடகிழக்கு மையம் வெளியிடும்ஆயுஹோம்என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேத தேசிய மையத்தின் பஞ்சகர்மா துறை பேராசிரியர் கோபேஷ் மங்கள், அதே துறையை சேர்ந்த முதுநிலை ஆய்வு மாணவர்கள் நிதி குப்தா, மற்றும் பர்வேஸ் ஸ்ரீவஸ்த்தவா ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆயுர்வேதத்தின் பாரம்பரிய பஞ்சகர்மா சிகிச்சை, தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதை இவர்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் இந்த சிகிச்சைக்கு முன்னும், பின்னும், கொட்டாவி விடுதல், தூக்க கலக்கம், சோர்வு, தூக்கத்தின் தரம், நேரம் போன்ற பல அறிகுறிகள் கணக்கிடப்பட்டனபஞ்சகர்மா சிகிச்சைக்குப்பின், தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கான  அறிகுறிகளில் நல்ல முன்னேற்றங்கள் காணப்பட்டன. மேலும், அஸ்வகந்தாவுடன், சிரோதரா மற்றும் தைலத்துடன் அளிக்கப்படும் ஷமானா சிகித்ஷா போன்ற சிகிச்சைகளும் தூக்கமின்மை பிரச்னைக்கு நல்ல தீர்வை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669704

*******************



(Release ID: 1669741) Visitor Counter : 323