சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் 19 தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சத்துக்கும் கீழ் சரிந்தது

Posted On: 03 NOV 2020 11:01AM by PIB Chennai

கொவிட் 19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5.5 லட்சத்துக்கும் கீழே குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொவிட் 19-க்கு எதிரான போரில் இந்தியா பல முக்கியமான மைல்களை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நோய் தொற்றுவோரின் எண்ணிக்கை 40,000-த்துக்கும் கீழே குறைந்துள்ளது. 15 வாரங்களுக்குப் பிறகு(105நாட்கள்) தினசரி புதிதாக நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 38,310 ஆக குறைந்திருக்கிறது. 2020 ஜூலை 22-ம் தேதி ஒரு  நாளில் மட்டும்  37,724 பேருக்கு புதிதாக நோய் தொற்று பதிவானது.

ஒவ்வொரு நாளும் கொவிட் தொற்றிலிருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. நோய் தொற்றால் உயிரிழப்போரின் விகிதமும் குறைந்திருக்கிறது. இந்தியாவில் நோய் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக பதிவாகும் போக்கு நிலவுகிறது

இன்னொரு சாதனையாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5.5 லட்சத்துக்கும் கீழே வெகுவாக குறைந்துள்ளது. மொத்த தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5,41,405 ஆக இருக்கிறது. மொத்த பாதிக்கப்பட்டோரில் இது வெறும் 6.55 % மட்டுமே.

மத்திய அரசு வெளியிட்ட நிலையான சிகிச்சை ஒழுங்குமுறைகளை பயனளிக்கும் பின்பற்றுதல் மற்றும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, முறையான மற்றும் பலன் தரக்கூடிய கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், விரைவாக சிகிச்சைக்காக சேர்த்தல் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த உத்தியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கூட்டாக கவனத்துடன் பலன் தரும் வகையில் அமல்படுத்துவதால் இந்த ஊக்குவிக்கும் பலன் கிடைத்திருக்கிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கொவிட்-19க்கு எதிரான போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் சுயநலமில்லாத அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவர்கள் ஆகியோர் இந்த வெற்றிக்கு கடன்பட்டிருக்கின்றனர்.

தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைவு என்பது, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகவேக உயர்வதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் இருக்கிறது. மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது.(76,03,121)தொற்று உள்ளோரின் எண்ணிக்கை மற்றும் குணம் அடைந்தோரின் எண்ணிக்கைக்கு இடையேயான வித்தியாசம் இன்று 70 லட்சத்தைத் தாண்டி 70,61,716 ஆக இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 58,323 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். தேசிய குணம் அடைந்தோர் விகிதம் 91.96% ஆக மேலும் அதிகரித்திருக்கிறது. புதிதாக குணம் அடைந்தோரில் 80 % பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 8000-த்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்திருக்கின்றனர்.

 

புதிதாக நோய் கண்டறியப்பட்டோரில் 74% பேர் பத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். கேரளா, தில்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் புதிதாக நோய் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 4000-த்துக்கும் அதிகமாக பதிவாகி இருக்கிறது. இந்த மாநிலங்களை அடுத்து மேற்கு வங்கத்தில் புதிதாக தொற்று பதிவானோர் எண்ணிக்கை 3000-த்துக்கும் அதிகமாக பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் நோய்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 80% பேர் பத்து  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் ஒரே நாளில் அதிகம் பேர் உயிரிழந்தது(104 பேர் பலி) பதிவாகி உள்ளது. இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் 1.49% ஆக இருக்கிறது.

*****************


(Release ID: 1669718) Visitor Counter : 307