நிதி அமைச்சகம்

சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய அரசு வழங்குகிறது

Posted On: 02 NOV 2020 4:08PM by PIB Chennai

இந்திய அரசின் நிதி அமைச்சகம், அதன் "சிறப்பு கடன் சாளரத்தின்" கீழ் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ 6,000 கோடியை இன்று வழங்கவிருக்கிறது.

4.42 சதவீத சராசரி விகிதத்தில் பெறப்பட்ட இந்தத் தொகை, அதே வட்டி  விகிதத்துக்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும். இது  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டியை விட குறைவென்பதால், இது அவர்களுக்கு பலனளிக்கும்.

இது வரை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ 12,000 கோடியை கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது.

கடன் வழங்குவதற்காக சிறப்பு சாளரத்தை  21 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்துள்ளன.

ஆந்திரா, அசாம், பிகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்தில்லி, ஜம்மு& காஷ்மீர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669467

*******

(Release ID: 1669467)



(Release ID: 1669512) Visitor Counter : 220