பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கூடுதலாக 100 பசுமை மற்றும் இயற்கை பொருட்கள் டிரைப்ஸ் இந்தியா இணையதளத்தில் அறிமுகம்

Posted On: 02 NOV 2020 3:52PM by PIB Chennai

இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்), தனது டிரைப்ஸ் இந்தியா இணையதளத்தில் கூடுதலாக 100 பசுமை காட்டு மற்றும் இயற்கை பொருட்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி முதல் டிரைப்ஸ் இந்தியா இணையதளத்தில் வாரம்தோறும் புதிய பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பொருட்கள், 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

இது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய டிரைஃபெட் அமைப்பின் மேலாண் இயக்குனர் திரு பிரவிர் கிருஷ்ணா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் பழங்குடியின மக்களின் பொருட்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த ராகி பொருட்கள், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் விளையும் தேனீர், காய்ந்த மிளகாய், கருப்பு அரிசி, உத்தரகாண்டில் இருந்து விளக்குகள், மேசை விரிப்புகள் கூடைகள் உள்ளிட்டவை இன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தை இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669461

*******

(Release ID: 1669461)



(Release ID: 1669508) Visitor Counter : 143