ஆயுஷ்

ஆயுஷ்துறை எதிர்கால வளர்ச்சிக்கு யுக்தி கொள்கை பிரிவு: ஆயுஸ் அமைச்சகம் நடவடிக்கை

Posted On: 01 NOV 2020 1:33PM by PIB Chennai

ஆயுஷ் துறையின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆயுஷ் துறை அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘‘யுக்தி கொள்கை  மற்றும் உதவி பிரிவு(SPFB)’’  ஏற்படுத்தவுள்ளது.   இது ஆயுஸ்துறையின் வளர்ச்சிக்கு, ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று.

யுக்தி கொள்கை பிரிவை ஏற்படுத்துவது, ஆயுஷ் துறையை எதிர்காலத்துக்கு தயார் செய்யும் முன்னோக்கிய நடவடிக்கை. ஆயுஷ் அமைச்சகத்தின் யுக்திகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்கு, இந்த பிரிவு ஆதரவாக செயல்படும்.  கொவிட் 19 உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த யுக்தி பிரிவு, ஆயுஷ் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டங்களை செயல்படுத்த, இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு தனது பயிற்சி பெற்ற நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும்.

அறிவு உருவாக்கம் மற்றும் மேலாண்மை, யுக்தி மற்றும் கொள்கை உருவாக்கம், இந்தியாவில் ஆயுஷ் துறை தொடர்பான சீரான வழிகாட்டுதல்கள் / ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கான கொள்கை  ஆகியவற்றை யுக்தி கொள்கை பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

ஆயுஷ் துறையின் பல துணை பிரிவுகளின் மாநில அளவிலான பிரச்னைக்கு தீர்வு காண்பதிலும், இதர நிறுவனங்களுடன் இன்வெஸ்ட் இந்தியா இணைந்து செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669290

•••••

(Release ID: 1669290)


(Release ID: 1669323) Visitor Counter : 219