குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தாம் மிகவும் போற்றும் தலைவரான சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்
Posted On:
31 OCT 2020 11:51AM by PIB Chennai
இந்தியாவை ஒன்றிணைத்தவரான திரு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவரது பிறந்த நாளான இன்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தினார். தாம் மிகவும் போற்றும் தலைவர் சர்தார் பட்டேல் என்று அவர் கூறினார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத் தலைவர், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நவீன இந்தியாவைக் கட்டமைக்க அவர் அளித்த தன்னிகரில்லா பங்களிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவை ஒன்றிணைத்து அவர் செய்த மாபெரும் சாதனைக்காக திரு சர்தார் பட்டேலை திரு நாயுடு புகழ்ந்தார். அவரது சிறந்த இயல்புகளை அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
திரு சர்தார் பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்திய திரு நாயுடு, இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க தனது திறமை, அனுபவம், திட்டமிடல், பேச்சுத் திறன், செயல்திறன் ஆகியவற்றை திரு பட்டேல் பயன்படுத்தியதாகக் கூறினார்.
நாட்டின் உள்துறை அமைச்சராக சர்தார் பட்டேல் கொண்டு வந்து பேணிக்காத்த உள்நாட்டு நிலைத்தன்மை இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்ததாக திரு நாயுடு மேலும் புகழாரம் சூட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669014
----
(Release ID: 1669094)
Visitor Counter : 185