பிரதமர் அலுவலகம்
சர்தார் சரோவர் அணையில் சக்திவாய்ந்த மின் விளக்குகள்: பிரதமர் தொடங்கி வைத்தார்
ஐ.நா.வின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும்,ஒற்றுமை சிலை இணையதளம் தொடக்கம்
கெவாடியா கைப்பேசி செயலி தொடக்கம்
மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டம் தொடக்கம்
Posted On:
30 OCT 2020 8:23PM by PIB Chennai
சர்தார் சரோவர் அணையில் சக்திவாய்ந்த மின் விளக்குகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஐ.நா.வின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை இணையதளம், மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டத்தில், கெவாடியா கைப்பேசி செயலி ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அழகு கற்றாழை செடிகள் தோட்டத்தையும், பிரதமர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஒற்றுமை தோட்டம்
இது 3.61 ஏக்கரில் அமைந்திருக்கும் தனிச்சிறப்பான பொழுது போக்கு பூங்கா. இதில் மின் விளக்குகளால் ஒளிரும் கண்ணாடி மாயத் தோற்றங்கள், உருவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இரவு சுற்றுலா அனுபவத்தை ரசிக்க, அனைத்து சுற்றுலா பயணிகளையும் பிரதமர் வரவேற்கவுள்ளார்.
கற்றாழை தோட்டம்
இந்த பிரம்மாண்ட பசுமை தோட்டத்தில், 17 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 450 தேசிய மற்றும் சர்வதேச வகைகள் உள்ளன. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில், 1.9 லட்சம் கற்றாழை செடிகள் உட்பட 6 லட்சம் தாவரங்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668940
----
(Release ID: 1668962)
Visitor Counter : 226
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam