இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பயிற்சியாளருக்கு கொவிட் தொற்று சார்லோர்லக்ஸ் ஓப்பனில் இருந்து லக்ஷயா சென் வெளியேற்றம்

Posted On: 28 OCT 2020 9:39PM by PIB Chennai

பயிற்சியாளர் டி.கே.சென்னுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜெர்மனியில் நடைபெற்று வரும் சார்லோர்லக்ஸ் ஓப்பன் பாட்மிட்டன் போட்டியில் இருந்து இந்திய வீரர் லக்ஷயா சென் வெளியேற்றப்பட்டார்.

இந்திய பாட்மிட்டன் வீர ர் லக்ஷயா சென், அவரது பயிற்சியாளர் மற்றும் அவரது பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் கடந்த 25-ம் தேதி ஜெர்மனியின் சர்ப்ரூக்கன் நகருக்கு வந்தனர். நடப்பு சாம்பியனான லக்ஷயா சென் மற்றும் அவருடன் வந்த இருவரும் பிராங்க்பட் நகரில் கொவிட் பரிசோதனைக்கு உட்படுதப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் கடந்த 27-ம் தேதி வெளியாகின. அதில் லக்ஷயா சென், பிசியோ தெரபிஸ்ட் இருவருக்கும் நொய் தொற்று இல்லை என்று உறுதியானது. ஆனால், பயிற்சியாளருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இதர வீரர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், பாட்மிட்டன் போட்டிகள் சுமுகமாக நடைபெறும் வகையிலும் போட்டியில் இருந்து லக்ஷயா சென் வெளியேற்றப்பட்டார். ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்குத் திரும்பும் தேதியை முடிவு செய்வதற்காக சென் மற்றும்  அவரது பயிற்சியாளரும் மீண்டும் ஒருமுறை கொவிட் பரிசோதனை  மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லக்ஷயா சென் பங்கேற்பதாக இருந்த சார்லோர்லக்ஸ் ஓப்பன், டென்மார்க் ஒப்பன், பீட்டர் கேட் அகாதமியில் நடைறும் 15 நாள் பயிற்சி ஆகியவற்றுக்கு டாப்ஸ் அமைப்பு நிதி உதவி அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668266

*******

(Release ID: 1668266)


(Release ID: 1668326)