ஜல்சக்தி அமைச்சகம்

ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்ட செயல்பாடு குறித்த இடைக்கால ஆய்வு

Posted On: 28 OCT 2020 4:11PM by PIB Chennai

ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடு குறித்த இடைக்கால அறிக்கை காணொலிக் காட்சி வாயிலாக தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் இன்று அளிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் வரும் 2023- 24 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் நூறு சதவிகித தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க அந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 1.01 கோடி ஊரக வீடுகளில் 88.57 லட்சம் வீடுகளில் குழாய் இணைப்புகள் இல்லை. 2020- 21 ஆண்டில் 20. 69 லட்சம் வீடுகளில் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுறு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் இத்திட்டத்தை முழுவதும் செயல்படுத்தவும் ராஜஸ்தான் மாநிலம் திட்டமிட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.  2020-21-ல் ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 2522 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668128

**********************


(Release ID: 1668158) Visitor Counter : 179