இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

சமுதாயங்களை இணைப்பதற்கான வலிமை மிக்க வழி விளையாட்டுகள்: திரு கிரண் ரிஜிஜூ

Posted On: 27 OCT 2020 7:17PM by PIB Chennai

"உடற்கல்வி மற்றும் விளையாட்டு: சமுதாயங்களை இணைப்பதற்கான சக்தி" என்னும் இரண்டு நாள் சர்வதேச இணையக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜூ தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம், மணிப்பூர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரி, திருவனந்தபுரம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த இணையக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர்சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரை இணைப்பதற்கான வலிமை மிக்க வழி விளையாட்டுகள் என்றார்.

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி (ஐஏஎஸ்) அதிகாரியும், தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு ஆர் சி மிஸ்ரா, சர்வதேச உடற்கல்வி கூட்டமைப்பின் துணைத் தலைவர், பேராசிரியர் பிரானிஸ்லாவ் அந்தாலா ஆகியோர் இந்த இணையக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள், சமுதாயத்தில் உடற்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், சர்வதேச அளவில் சமூகங்களை ஒன்றிணைப்பதில் விளையாட்டின் பங்கு குறித்தும் பேசினர்.

 

"இந்த இணையக் கருத்தரங்கின் மையக் கரு உடற்பயிற்சிகளுக்கு மட்டுமில்லாது சமுதாயத்துக்கும் அவசியமானதாகும். விளையாட்டு வெற்றிகளின் மூலம், ஒரு பகுதி வளம் பெறுகிறது, ஒரு ஒட்டுமொத்த சமுதாயம் சாதிக்கிறது," என்றும் மத்திய அமைச்சர் திரு ரிஜிஜூ கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667933

*********

(Release ID: 1667933)


(Release ID: 1668035) Visitor Counter : 169