திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் சார்ந்த சுற்றுச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கும் வாரியங்கள் மற்றும் மதிப்பீட்டு முகமைகளுக்கான புதிய வழிமுறைகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் தேசிய தொழில் கல்வி குழு வெளியீடு

Posted On: 27 OCT 2020 3:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில் உலகளவில் திறன் தலைநகராக இந்தியாவை முன்னேற்றும் முயற்சியாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், தேசிய தொழில் கல்வி குழுவும் இணைந்து   விருதுகள் வழங்கும் வாரியங்கள் மற்றும் மதிப்பீட்டு முகமைகளுக்கான புதிய வழிமுறைகளை காணொலி வாயிலாக இன்று வெளியிட்டன.

இந்த வழிமுறைகளை வெளியிட்டு பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, கடந்த ஐந்து ஆண்டுகளில் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இதுவரை 5.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விருதுகள் வழங்கும் வாரியங்கள் மற்றும் மதிப்பீட்டு முகமைகள், திறன் சார்ந்த சுற்றுச் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும்இந்த புதிய வழிமுறைகள் ஒழுங்கு நடவடிக்கை களை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று வெளியிடப்பட்ட வழிமுறைகள், நல்ல ஆளுகைக்கு வித்திடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667824

**********************


(Release ID: 1667994) Visitor Counter : 173