பாதுகாப்பு அமைச்சகம்

காலாட்படை தினம் கொண்டாட்டம்

Posted On: 27 OCT 2020 3:20PM by PIB Chennai

இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர் படையான காலாட் படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அக்டோபர் 27-ஆம் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. கடந்த 1947 ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடியினர் ஜம்மு காஷ்மீரில் நுழைவதைத் தடுத்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முதலாவதாக இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் கால் பதித்து, ஜம்மு  காஷ்மிர் மாநிலம் காப்பாற்றப்பட்டது.

நாட்டுக்காக பல்வேறு போர்களில் உயிர் நீத்த காலாட்படை வீரர்களை வணங்கும் வகையில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் காலாட்படை தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்றது. முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நராவனே மற்றும் ராணுவ கமாண்டர்கள், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

இந்த நாளை முன்னிட்டு காலாட்படையின் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில்நாட்டின் இறையாண்மை மற்றும் நேர்மையை காக்கும் வகையில் காலாட்படை வீரர்கள் தைரியத்துடனும், விட்டுக்கொடுக்கும் தன்மையுடனும், சுயநலமில்லாமல் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667818

**********************



(Release ID: 1667868) Visitor Counter : 551