அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய வகை கிருமிநாசினிகள் ரசாயனங்களின் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன, கோவையை சேர்ந்த நிறுவனத்தின் புதுமை

Posted On: 26 OCT 2020 4:04PM by PIB Chennai

கொவிட்-19 பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள ரசாயனங்கள் நிறைந்த கிருமி நாசினிகள் மற்றும் சோப்புகளால் அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் ஏற்பட்ட அரிப்பு மற்றும் காய்ந்தத் தன்மை ஆகியவற்றில் இருந்து விரைவில் விடுதலை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) கிருமி நாசினிகளுக்கு மாற்றுகளை உருவாக்கி உள்ளன. இந்த புதிய வகை கிருமி நாசினிகள் ரசாயனங்களின் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைதல் வளர்ச்சி வாரியம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முயற்சியான, ஐஐடி மும்பையின் புதுமைகள் மற்றும் தொழில்முனைதல் சங்கத்தால் செயல்படுத்தப்பட்ட, கவச் என்பதன் கீழ் மொத்தம் 10 நிறுவனங்கள் பாதுகாப்பான கிருமி நாசினி தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன.

மும்பையை சேர்ந்த இம்ப்லாக்ஸ் வாட்டர் சிஸ்டம்ஸ், கோவையை சேர்ந்த எடா ப்யூரிபிகேஷன், புனேவை சேர்ந்த வீஇன்னோவெட்டிவ் பயோ சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.

மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு தீர்வுகளை வழங்கும் கோவையை சேர்ந்த எடா ப்யூரிபிகேஷன், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த மைக்ரோ கேவிட்டி பிளாஸ்மா டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இதன் புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் காற்று அல்லது பிராண வாயுவில் இருந்து நேரடியாக கிருமி நாசினி தயாரிக்கப்படுகிறது. இது ரசாயனம் நிறைந்த கிருமி நாசினிகளுக்கு நல்லதொரு மாற்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667587

**********************



(Release ID: 1667598) Visitor Counter : 314