நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2020-21 காரீப் சந்தைப்பருவ கொள்முதல் செயல்பாடுகள்

Posted On: 24 OCT 2020 4:14PM by PIB Chennai

2020-21ம் ஆண்டின் தற்போதை காரீப் சந்தை பருவத்தில், கடந்த ஆண்டுகளைப் போலவே குறைந்த பட்ச ஆதரவு விலை  திட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் 2020-21 பருவ காரீப் பயிர்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

2020-21-ம் ஆண்டுக்கான காரீப் நெல்  கொள்முதல் பணிகள் தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு&காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் விரைவான வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 23-10-2020-ம் தேதி வரை இந்த மாநிலங்களில் 135.72 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 109.54 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 23.91% அதிகமாகும். மொத்த கொள்முதல் அளவான 135.72 லட்சம் மெட்ரிக் டன்னில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும் 88.44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நெல் கொள்முதலில் 65.16% ஆகும். தலா ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.18,800 என்ற குறைந்த பட்ச ஆதார விலையில்  மொத்தம் ரூ.25,625.29 கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக காரீப் சந்தைப் பருவக் கொள்முதலுக்குத் தரப்பட்டுள்ளது. மொத்தம்11.57 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.  

மேலும், மாநிலங்களில் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 2020 காரீப் சந்தைப் பருவத்துக்கான எண்ணைய் வித்துகள், பருப்பு வகைகள் 45.10 லட்சம்  மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667298

----



(Release ID: 1667314) Visitor Counter : 150