இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கொரான தொற்றுக்கு சிகிச்சை பெற்ற மாற்றுத்திறன் வில்வித்தை வீரர் அங்கிட் குணம் அடைந்தார்
Posted On:
23 OCT 2020 7:00PM by PIB Chennai
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியான வில்வித்தை வீரர் அங்கிட் குணம் அடைந்தார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 13-ம் தேதி சோனபட்டில் உள்ள பகவான்தாஸ் மருத்துவமனையில் அங்கிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் குணம் அடைந்தார். எனினும், அவர் பத்து நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
முகாமில் பங்கேற்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் கொரோனா தொற்று சோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் சோன்பட்டில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய தேசிய முகாமில் அங்கிட் பங்கேற்றிருந்தார். பின்னர் முகாம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையான வழிகாட்டும் செயல்முறைகளின் போது கடந்த 12ம் தேதி மீண்டும் அவருக்கு நடந்த கொரோனா தொற்று சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667110
------
(Release ID: 1667178)
Visitor Counter : 132