புவி அறிவியல் அமைச்சகம்

தெற்கு ஆசிய ‘திடீர் மழை, வெள்ள வழிகாட்டுதல் சேவைகள் குழு’ தொடக்கம்

Posted On: 23 OCT 2020 4:28PM by PIB Chennai

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை இணைந்த திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழுவை கடந்த 22-ம் தேதியன்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர்  திரு.எம்.ராஜீவன் தொடங்கியுள்ளார்

திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழு காணொலி காட்சி வாயிலாக தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் சர்வதேச அளவிலான, இந்தியாவைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வின் தலைமை விருந்தினரான திரு.எம்.ராஜீவன் தமது தொடக்க உரையில், திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழுவின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த மண்ணின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவுக்கான கண்காணிப்பு இணைப்புகளை விரிவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். வானிலை குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பேரழிவு மேலாண்மை அதிகாரிக்கு சரியான நேரத்துக்கு சென்று சேர  சமூக வலைதள உபயோகம் உள்ளிட்டவற்றுடன் பங்கேற்பாளர்களைக் கொண்ட தானியங்கி முறையிலான தகவல் பரவல் முறை உருவாக்கப்பட உள்ளது. உறுப்பினர் நாடுகளுடன் பிராந்திய & சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்காக, பிராந்தியத்தில் சேவைகளை மேம்படுத்துதல் பரமாரித்தல், நிபுணத்துவம், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உலக வானியல் அமைப்பு & நீரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று திரு ராஜீவன் வலியுறுத்தினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667043

------


(Release ID: 1667114)