பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இந்தியாவில் ஊழலை ஒழிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது: ஊழலுக்கு எதிரான ஜி-20 பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 OCT 2020 7:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான ஜி-20 பணிக்குழுவின் முதல் கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய மத்திய வட கிழக்கு மாகாணங்களுக்கான மேம்பாட்டுத்துறை(தனிப் பொறுப்பு),  பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை, பிரதமர் அலுவலகம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு எதிராக பிரதமர் திரு மோடி தலைமையிலான இந்தியா உறுதி ஏற்று இருப்பதாக அப்போது அவர் கூறினார். இதனடிப்படையில் கடந்த ஆறு வருடங்களில் பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமல்லாது கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பிரதமர் மோடியின் அரசு 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988 திருத்தி அமைத்தது என்று அமைச்சர் கூறினார். இந்த திருத்தச் சட்டத்தின் மூலமாக பெரிய நிறுவனங்களில்  ஊழல்கள் தடுக்கப்படுவதுடன் லஞ்சம் கொடுப்பவரும் வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தப்படுவார் என்றார் அவர்.

மேலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி குடிமக்களை மையமாகக்கொண்ட பொறுப்புணர்வுடன் கூடிய ஆளுமையை செயல்படுத்துவதே தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666850

------(Release ID: 1666893) Visitor Counter : 306