வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தானியங்கு செயல்பாடுகளை நம் நாட்டு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்: சொத்து சான்றிதழை இணைய வழியாக பெறும் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் புரி உரை

Posted On: 21 OCT 2020 5:29PM by PIB Chennai

தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தி மனிதத் தலையீடு இல்லாத  தானியங்கு செயல்பாடுகளை நம் நாட்டு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்தியவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி வலியுறுத்தியுள்ளார்.

வலிமையான தொழில்நுட்பத்தின் உதவியால் மென்பொருள் துறையை மேம்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

சொத்து சான்றிதழை இணையத்தின் மூலம் பெறுவதற்கான - தர்த்தி ஜியோ (e-Dharti Geo)  என்னும் இணைய முகப்பை (portal) அவர் இன்று தொடங்கி வைத்தார்.

சொத்து விவரங்கள், நிலவகை, ஒதுக்கீட்டு தேதி, இடத்தின் விவரங்கள், விலாசம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இந்தச் சான்றிதழ் ரூபாய் ஆயிரத்திற்கு கிடைக்கும். பொதுமக்கள்,  www.ldo.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்தச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666461

                                                                        ------ 



(Release ID: 1666610) Visitor Counter : 149