குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

புதுமையான காதி காலணிகளை திரு நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்; ரூ 5,000 கோடி வர்த்தகத்தை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் இலக்காக நிர்ணயித்துள்ளது

Posted On: 21 OCT 2020 4:03PM by PIB Chennai

கையால் நெசவு செய்யப்பட்ட காதி துணியின் மென்மையை நீங்கள் தற்போது காலணியில்  பெறலாம். இந்தியாவின் முதல் உயர்தர காதி காலணிகளை மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று அறிமுகப்படுத்தினார்.

காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள இந்த காலணிகளை காணொலி மூலம் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

பட்டு, பருத்தி மற்றும் கம்பளி போன்ற காதி துணியை கொண்டு இந்த காலணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளமான http://www.khadiindia.gov.in./மூலமும் வாங்கலாம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த காலணிகளை தயாரித்துள்ளதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தை வெகுவாக பாராட்டினார். இத்தகைய பொருட்களின் மூலம் சர்வதேச சந்தையை பிடிக்கலாம் என்று அவர் கூறினார்.

 

5,000 கோடி வர்த்தகத்தை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் இலக்காக நிர்ணயித்துள்ளது. இத்தகைய பொருட்களை தயாரித்து சந்தைப் படுத்துவதன் மூலம் இந்த இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அடையலாம் என்று திரு கட்கரி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666396

----- 


(Release ID: 1666553) Visitor Counter : 204