ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் திட்ட முன்னேற்றம் பற்றி ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு

Posted On: 21 OCT 2020 2:35PM by PIB Chennai

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 2024ம் ஆண்டுக்குள், குடிநீர் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், இத்திட்ட பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த ஜல்சக்தி அமைச்சகம் ஆய்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக இடைக்கால ஆய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுகிறது. கிராமங்களில் உள்ள வீடுகளில்குடிநீர் இணைப்பு நிலவரம் குறித்தும், இதற்காக செய்யப்பட்டுள் ஏற்பாடுகள் குறித்தும் மாநிலங்கள் விளக்கி வருகின்றன.  

இன்று சிக்கிம் மாநில அரசு, ஜல்ஜீவன் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கியது. சிக்கிம் மாநிலத்தில் 1.05 லட்சம் கிராம வீடுகள் உள்ளன. இவற்றில் 70,525 (67%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்க சிக்கிம் திட்டமிட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் குடிநீர் விநியோக கட்டமைப்பு நன்றாக உள்ளது. இங்கு, 411 கிராமங்களில் குடிநீர் விநியோக திட்டம் உள்ளது. எஸ்.சி/எஸ்டி பிரிவினர் அதிகம் வசிக்கும் கிராமங்கள் மற்றும் இலக்கு மாவட்டங்களில் இந்த நிதியாண்டுக்குள், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை நிறைவு செய்ய சிக்கிம் திட்டமிட்டுள்ளது. குடிநீர் விநியோகம் உள்ள கிராமங்களில், 81 கிராமங்களில் மட்டும் வீட்டுக்கு வீடு குடி நீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 211 கிராமங்களில், 7,798 குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் 100 சதவீத பணியை நிறைவு செய்ய முடியும். இத்திட்டத்தை விரைவில் முடிக்க சிக்கிம் திட்டமிட்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டில், சிக்கிம் மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்த, ரூ.31.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.7.84 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

15வது நிதி ஆணைய மானியத்தின் கீழ், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தை, குடிநீர் விநியோக மற்றும் துப்புரவு பணிக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666366

*******

(Release ID: 1666366)



(Release ID: 1666394) Visitor Counter : 152