மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மாணவர்கள் அறிவார்ந்த இந்தியாவின் தூதுவர்களாகவேண்டும்; மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
Posted On:
19 OCT 2020 7:31PM by PIB Chennai
இந்தூர் ஐஐடி-யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இணையம் வாயிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் பங்கேற்றார். மேலும் ஐந்து புதிய கட்டங்களையும் திறந்து வைத்தார். நிர்வாகக் குழு தலைவர், பேராசிரியர் பி. பதக் நிகழ்வுக்கு தலைமையேற்றார். செனட் தலைவர் பேராசிரியர் நீலேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மாணவர்களை வாழ்த்தி பேசிய மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் பொக்கிரியால் மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவை சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். கல்வியில் பெற்ற த த்துவார்த்த அறிவை நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தும்போதுதான் மாணவர்களுக்கான உண்மையான தேர்வு என்பது தொடங்குவதாகவும் குறிப்பிட்டார். அறிவார்ந்த இந்தியா இயக்கத்தின் தூதுவர்களாக மாணவர்கள் தங்கள் அறிவைப் பரப்ப வேண்டும் மற்றும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐஐடி இந்தூர் கல்வி நிறுவனம், ஆராய்ச்சிகளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறது என்றும், 2740 ஆராய்ச்சி தாள்கள், 35 புத்தகங்கள் மற்றும் 175 அத்தியாயங்களை ஆராய்ச்சியாளர்கள் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறினார். இது இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை ஐஐடி அமைப்புகளில் தலா ஒரு ஆசிரியரின் உயர்ந்தபட்ச பாராட்டத்தக்க குறியீடாகும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். இந்த மையம் 61 காப்புரிமைகளை தாக்கல் செய்திருப்பதாகவும், அதில் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சுயசார்பு இந்தியா மற்றும் புதுமை படைத்தலுக்காக தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் இந்தூர் ஐஐடியின் முயற்சியையும் அவர் பாராட்டினார். 2020ம் ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தர வரிசையில் இந்தூர் ஐஐடி 10வது இடம் பெற்றிருப்பதற்கும், 2020ம் ஆண்டின் ஆசிய பல்கலைக்கழகங்கள் தர வரிசையில் 55-வது இடம் பெற்றிருப்பதற்கும், டைம்ஸ் உயர் கல்வியின் இளம் பல்கலைக்கழக தர வரிசையில் 64ம் இடம் பிடித்ததற்கும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665886
(Release ID: 1666018)
Visitor Counter : 142