நித்தி ஆயோக்

இந்தியாவில் முதல் முறையாக ‘கிளவுட் ’ புதுமை மையம்: நிதி ஆயோக் மற்றும் அமேசான் வெப் சர்வீஸஸ் தொடக்கம்

Posted On: 19 OCT 2020 5:47PM by PIB Chennai

சமூகத்தில்  சவால்களாக உள்ள பிரச்னைகளை, டிஜிட்டல் புதுமைகள் மூலம் தீர்க்கமுன்னணி தொழில்நுட்பமானகிளவுட் புதுமை மையத்தை(சிஐசி)’  அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக அமைப்பதை நிதி ஆயோக்  இன்று அறிவித்தது.

அமேசான் வெப் சர்வீஸின், உலகளாவிய சிஐசி  திட்டத்தின்  ஒரு பகுதிதான், கிளவுட் புதுமை மையம்அரசு அமைப்புகள், என்ஜிஓக்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து  சவால்களுக்கு தீர்வு காணவும், புதிய சிந்தனைகள், கருத்துக்களை பரிசோதிக்கவும், அமேசான் வெப் சர்வீஸ் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பெறவும், இந்த கிளவுட் புதுமை மையம் வாய்ப்பளிக்கிறது.

அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை பிரிவு துணைத் தலைவர் திரு மேக்ஸ் பீட்டர்சன் கூறுகையில், ‘‘பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணவும், பொதுச் சேவைகளை மக்களுக்கு அளிக்கவும், உலகம் மழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள், கிளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்துவதை நாங்கள் பார்க்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கு, எங்களின் கிளவுட் புதுமை மையம் வினையூக்கியாக செயல்படுகிறது’’ என்றார்.

அடல் புதுமை திட்ட இயக்குனர் திரு ரமணன் கூறுகையில், ‘‘அமேசான் வெப் சர்வீஸூடன் இணைந்து செயல்படுவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், பிளாக் செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை இந்தியாவில் ஊக்குவிப்பதற்கு, சிஐசி உதவியாக இருக்கும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665845

----- (Release ID: 1665955) Visitor Counter : 185