பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய - இலங்கை கடற்படை இடையே, ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி

Posted On: 18 OCT 2020 6:11PM by PIB Chennai

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடைய ஸ்லிநெக்ஸ்-20’  என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என்  சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் ரியர் அட்மிரல் பண்டாரா ஜெயதிலகா தலைமையில் கலந்து கொள்கின்றன. இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் கமோர்தா, ஐஎன்எஸ் கில்டன் ஆகிய போர்க்கப்பல்கள் கிழக்கு மண்டல கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் வத்சயன் தலைமையில், கலந்து கொள்கின்றன. இது தவிர, இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக  ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள், கடற்படையின்  டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன. 

இதற்கு முன்பு ஸ்லிநெக்ஸ்கூட்டு பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் அருகே நடந்தது.

 

இரு தரப்பு கடற்படைகள் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த ஸ்லிநெக்ஸ்-20 கூட்டு பயிற்சி உதவும். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் இலக ரக விமானங்களின்  திறனையும், இந்த கூட்டு பயிற்சி வெளிப்படுத்தும்.

ஆயுத பயிற்சி உட்பட பல பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொள்ளவுள்ளன.

கொவிட்-19 பின்னணியில், நேரடியாக தொடர்பு கொள்ளமால், நடுக் கடலில்  இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665683

**********************



(Release ID: 1665691) Visitor Counter : 250