தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
“அரசு ஊழியர்கள் மேலும் டிஏ பெற தயாராகின்றனர்” என்ற தலைப்பில் சில ஊடங்கங்களில் வெளியான செய்திகளை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
Posted On:
16 OCT 2020 5:02PM by PIB Chennai
2020 அக்டோபர் 16-ம் தேதியில் “அரசு ஊழியர்கள் மேலும் டிஏ பெற தயாராகின்றனர்” என்ற தலைப்பில் சில ஊடங்கங்களில் வெளியான செய்திகளை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும்தொழிலக ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் புதிய குறியீடு குறித்து ஒருபோதும் கூறவில்லை என்றும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம், மறுத்துள்ளது. அமைச்சகம் கீழ்குறிப்பிட்ட விளக்கத்தை அளித்துள்ளது;
“இதில் உண்மை என்னவெனில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்த தொழிலாளர் பணியகமானது 2020 அக்டோபர் 21-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 2016-ம் ஆண்டுக்கான தொழிலக ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் புதிய தொடரை வெளியிட உள்ளது. இந்த குறியீடு, அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் டிஏ சலுகையை திருத்தியமைப்பதற்கு பயன்படுத்தப்படும். எனினும், புதிய குறியீட்டின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலக பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சகம் ஒருபோதும் சொல்லவில்லை. இது புதிய தொடரின் நடத்தைகளை சார்ந்தே இருக்கும். இந்த நிலையில் இப்போதே இதனை கணிப்பது என்பது பொருத்தம் அற்றதாகும்” என்று கூறி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665153
**********************
(Release ID: 1665230)
Visitor Counter : 157