சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

எஃப்எஸ்எஸ்ஏஐ ஒருங்கிணைத்த உலக உணவு தினம் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்த்தன் தலைமையேற்று நடத்தினார்.

Posted On: 16 OCT 2020 3:50PM by PIB Chennai

உலக உணவு தினத்தைக் கொண்டாடும் ஒரு நிகழ்வை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் இன்று தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்வை எஃப்எஸ்எஸ்ஏஐ ஒருங்கிணைத்தது. இந்த ஆண்டு வளர், ஊட்டமளி, நிலைநிறுத்து, ஒன்றிணைவோம் என்ற கருத்தில் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் திரு.அஷ்வினி குமார் சவ்பே காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்றார். 

பெருந்தொற்று காரணமாக உலகமே எதிர்பாராத சவால்களை சந்தித்திருக்கும் சூழல் காரணமாக உணவு, நுண்ணூட்டசத்து, ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நிலைத்தன்மை ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று திரு.ஹர்ஷ் வர்த்தன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் சரியானதை உண்ணும் இந்தியா இயக்கமானது, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பதை ஒவ்வொருவரும் சூழல் ரீதியாக நிலையான வழியில் முன்னெடுக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது என்று குறிப்பிட்டார்.  இது அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான பாதுகாப்பான உணவு வழங்குவதை  கட்டாயம் ஆக்குவதன் ஒரு பகுதியாகும். இது நமது அனைத்து குடிமக்களின் ஆரோக்கியத்தை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உணவு பாதுகாப்பு சூழல்முறைகளை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

உணவு விநியோக சங்கிலியில் இருந்து கெட்ட கொழுப்புகளை நீக்குவதே இந்த ஆண்டின் முக்கியமான நோக்கமாகும். ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி எண்ணைய்களில்(வனஸ்பதி எண்ணைய் போன்றவை) உணவு நச்சு இருக்கிறது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் வறுக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் கெட்டகொழுப்புகள் இந்தியாவில் தொடர்பற்று பரவும் நோய்களை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாகும். ஹர்ஷ் வர்த்தன் கூறுகையில், “இதயநோய்களுக்கான மாறக்கூடிய அபாய காரணியாக கெட்ட கொழுப்புகள் இருக்கின்றன. இதயநோய்களுக்கான அபாய காரணிகளை நீக்குவது குறிப்பாக கோவிட் 19 தொற்று காலத்தில் அவசியமானதாகும். இப்போதைய காலகட்டத்தில் இதயநோய்களை உடையவர்கள் கடுமையான நிலைகளை அடையக் கூடும். இறப்பு மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்என்று கூறினார்.  உலக சுகாதார நிறுவனத்தின் இலக்குக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு 2022-ம் ஆண்டுக்குள் கெட்ட கொழுப்பு இல்லாத இந்தியாவை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு ஒவ்வொருவரும் முன் வரவேண்டும் என்று நினைவுபடுத்தினார். 75வது சுதந்திர தினத்தின்போது புதிய இந்தியா என்ற பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665119

**********************



(Release ID: 1665214) Visitor Counter : 219