நிதி அமைச்சகம்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் நிர்வாகத்துக்கு கீழுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 5 லட்சம் கோடியை தாண்டியது

Posted On: 16 OCT 2020 10:11AM by PIB Chennai

நிர்வாகத்துக்கு கீழுள்ள சொத்துக்களின் (AUM) மதிப்பு ரூபாய் 5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 12 வருடங்களில் தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் அடல் பென்ஷன் திட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தாதாரர்கள் செய்த பங்களிப்பு இந்த சாதனையை எட்ட உதவியுள்ளது.

அரசு துறையில் இருந்து 70.40 லட்சம் சந்தாதாரர்களும், அரசுசாரா துறைகளில் இருந்து 24.24 லட்சம் சந்தாதாரர்களும் தேசிய ஓய்வூதிய அமைப்பில் இணைந்துள்ளனர்.

ஒழுங்குமுறை அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்காக தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணைய தலைவரான திரு சுப்ரதிம்  பந்தோபாத்யாய், ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பை எட்டியுள்ளது சாதனை என்றும் சந்தாதாரர்களின் நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664991



(Release ID: 1665039) Visitor Counter : 159