குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துர்க்மெனிஸ்தான் அதிபர் இடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 15 OCT 2020 1:39PM by PIB Chennai

துர்க்மெனிஸ்தான் அதிபர் மேன்மைமிகு திரு குர்பங்குலி பெர்டிமுகமெதொவ், இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்தை தொலைபேசி மூலம் இன்று தொடர்பு கொண்டார்.

வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கிடையேயான சுமூகமான நட்புறவை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். பல்வேறு துறைகளில் தொடர்ந்து நீடிக்கும் ஒத்துழைப்பை அவர்கள் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருக்கும் அதிக அளவிலான சாத்தியக்கூறுகளை ஒத்துக்கொண்ட தலைவர்கள், குறிப்பாக மருந்துகள் தொழிலில் இந்திய மற்றும் துர்க்மெனிய நிறுவனங்களுக்கிடையேயான வெற்றிகரமான கூட்டு குறித்து குறிப்பிட்டனர்.

துர்க்மெனிஸ்தான் அதிபரின் தொலைபேசி அழைப்புக்கும், இந்தியாவுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது தனிப்பட்ட உறுதிக்கும் குடியரசுத் தலைவர்  நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664700

*********

(Release ID: 1664700)



(Release ID: 1664742) Visitor Counter : 262