அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்புப் பணிக்குழு(OECD)வின் நல்ல ஆய்வக நடைமுறைகளு (GLP) க்கான துணைத்தலைமையாக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது

Posted On: 15 OCT 2020 12:58PM by PIB Chennai

இந்தியாவின் நல்ல ஆய்வக நடைமுறைகளின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்புப் பணிக்குழு(OECD)வின் நல்ல ஆய்வக நடைமுறைகளு (GLP)  க்கான துணைத்தலைமையாக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது.

நல்ல ஆய்வ நடைமுறைகள் என்பது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பினால் மதிப்பிடப்படும் ஒரு தரமுறையாக இருக்கிறது. மருத்துவக் கருவிகள் மற்றும் உணவு / தீவன சேர்க்கைகள், அழகு பொருட்கள், வேளாண்ரசாயனங்கள், மருந்துகள் (மனிதர்கள் மற்றும் கால்நடைகள்), தொழிலக ரசாயனங்கள், பல்வேறு ரசாயனங்களுக்கு பாதுகாப்பு தரவு உற்பத்தி செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது. ஒழுங்குமுறை அதிகாரிகளால் இவை ஏற்றுக் கொள்ளப்படலாம்.

2002-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மத்திய அமைச்சரவையின் அனுமதியின்படி தேசிய நல்ல ஆய்வக நடைமுறைகளுக்கு ஏற்ற கண்காணிப்பு ஆணையம் (NGCMA) , இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் உருவாக்கப்பட்டது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு கவுன்சில் நடைமுறைகள் மற்றும் நல்ல ஆய்வக நடைமுறைகளுக்கான ஓஇசிடி கொள்கைகள் ஆகியவற்றில் கூறப்பட்டபடி மேற்குறிப்பிட்ட வகைகளில் உள்ள புதிய ரசாயனங்கள் மீது பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்வதற்கான சோதனை வசதிகளுக்கு நல்ல ஆய்வக நடைமுறை சான்றிதழை என்ஜிசிஎம்ஏ என்ற தேசிய அமைப்பு வழங்குகிறது

ரசாயனங்கள் அபாயமற்ற இயல்பைக் கொண்டவை என்பது ஆய்வுகள் மற்றும் தரவுகளுடன் நிரூபிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. சம்பந்தப்பட்ட நாடுகளின் முறைப்படுத்தும் அமைப்புகள் அதனை ஆய்வு செய்து இந்த ரசாயனங்கள் எந்த ஒரு மனிதருக்கோ அல்லது சூழலுக்கோ கேடு விளைவிக்காதவை என்று சான்றழிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664688

 

*********

(Release ID: 1664688)



(Release ID: 1664736) Visitor Counter : 185