நிதி அமைச்சகம்
ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் காணொலி மூலம் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்
Posted On:
14 OCT 2020 9:36PM by PIB Chennai
சவுதி அரேபியாவின் தலைமையில் இன்று நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் கலந்து கொண்டார்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார கண்ணோட்டம், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு ஜி20 நாடுகளின் எதிர்வினை, 2020-ஆம் வருடத்துக்கான ஜி20 நாடுகளின் நிதி முன்னுரிமைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முதலாம் அமர்வில் பேசிய நிதி அமைச்சர், 2020 ஏப்ரல் 15 அன்று ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஒத்துக் கொண்ட கொவிட்-19-க்கு எதிர்வினை ஆற்றுவதற்கான ஜி20 செயல் திட்டத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
கொவிட்-19-ஐ திறன்மிகுந்த முறையில் எதிர்கொள்வதற்காக ஜி20 செயல்திட்டத்தின் சமீபத்திய உறுதியளிப்புகள் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
ஜி20 செயல்திட்டத்தின் உறுதியளிப்புகளின் முக்கிய வழிகாட்டும் கொள்கைகள் குறித்து விளக்கிய அவர், புத்தாக்க திட்டத்தில் சுகாதார மற்றும் பொருளாதார குறிக்கோள்கள் சம அளவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664573
*********
(Release ID: 1664573)
(Release ID: 1664663)
Visitor Counter : 213