குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பிரச்சினைகள் மற்றும் குறைகளை விளைந்து களைவதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2020 6:38PM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் குறைகளுக்கான உதவி மற்றும் தீர்வுகளை வழங்குவதற்காக நவீன தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

பிரச்சினைகள் மற்றும் குறைகளை விளைந்து களைவதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றை சாளர தளமான 'சாம்பியன்ஸை' செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றைக் கொண்டு அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது.

கொவிட்-19-ஐ ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அதை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி எதிர்காலத்துக்கு தேவைப்படும் இடையீடுகளுக்கான அனைத்து முயற்சிகளையும் குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் எடுத்து வருகிறது. 

அமைச்சகத்தின் சாம்பியன்ஸ் தளத்தில் கீழ் காணும் இணைப்பில் 'ஏஐ கார்னர்' என்னும் இடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பகுப்பாய்வுகளை காணலாம்: https://champions.gov.in/msme_grievances/news_opinion/analytics.htm

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664442

***********

(Release ID: 1664442)


(வெளியீட்டு அடையாள எண்: 1664649) வருகையாளர் எண்ணிக்கை : 570
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu , Kannada