உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பசுமை செயல்பாட்டின் கீழ் வழங்கப்படும் மானியம் தற்சார்பு இந்தியாவை நோக்கிய நடவடிக்கை: திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 14 OCT 2020 2:52PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், பசுமை செயல்பாட்டின் (ஆபரேஷன் கிரீன்ஸ்) கீழ் வழங்கப்படும் மானியம் தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு மிகப்பெரிய நடவடிக்கை என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு மிக்க தலைமையின் கீழ், விவசாயிகளின் நலனுக்காக பல முன்னோடி திட்டங்களை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவை விட குறையும் போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

தற்போது இந்த மானியம் கிசான் ரயில் திட்டத்திலும் எளிமையான முறையில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த மானியத்தை 19 வகையான பழங்களுக்கும் 14 வகையான காய்கறிகளுக்கும் பெறலாம்.

 

பழங்கள்: மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, கிவி, லிச்சி, மோசம்பி, ஆரஞ்சு, கின்னோ, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி, மாதுளை, பலா, ஆப்பிள், அவோன்லா, பேஷன் மற்றும் பேரிக்காய்.

காய்கறிகள்: பிரெஞ்ச் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிஃப்ளவர், பச்சைமிளகாய், ஒக்ரா, வெள்ளரிக்காய், பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664311

**********************




(Release ID: 1664342) Visitor Counter : 165