மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கவ் டெக்-தான் 2020 என்னும் தொழில்நுட்ப நிகழ்ச்சியை 2020 அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை என் ஐ சி, ஐ ஈ ஈ ஈ கணினி சங்கம் மற்றும் ஆரக்கிள் நடத்துகின்றன

Posted On: 14 OCT 2020 2:22PM by PIB Chennai

பிரதமரின் சிந்தனைகள் மீது கட்டமைக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலுடனும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழும் கவ் டெக்-தான் 2020 என்னும் தொழில்நுட்ப நிகழ்ச்சியை 2020 அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை தேசிய தகவல் மையம்  (என் ஐ சி)ஐ ஈ ஈ ஈ கணினி சங்கம் மற்றும் ஆரக்கிள் ஆகியவை இணைந்து  நடத்துகின்றன.

புதிய சிந்தனைகளை உருவாக்குவதையும், புதுமைகளை ஊக்குவிப்பதையும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதையும் இந்த மெய்நிகர் ஹேக்கத்தான் நோக்கங்களாக கொண்டுள்ளது.

https://www.computer.org/education/oracle_hackathon_2020 என்னும் ஆன்லைன் பதிவு தளத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் சாவ்னே வெளியிட்டார்.

 

இந்த ஹேக்கத்தானை நடத்துவதற்கு ஒன்று சேர்ந்துள்ள தேசிய தகவல் மையம்ஐ ஈ ஈ ஈ கணினி சங்கம் மற்றும் ஆரக்கிள் ஆகியவற்றை அவர் பாராட்டினார்.

இந்திய டிஜிட்டல் சூழலியலின் முக்கியப் பகுதியாக இளைஞர்கள் இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்று சவால்களுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதை தான் ஆவலாக எதிர்நோக்கி உள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664295

**********************



(Release ID: 1664333) Visitor Counter : 228