அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்காகவும் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
Posted On:
13 OCT 2020 1:16PM by PIB Chennai
நாட்டில் சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும், கட்டுப்படியாகக்கூடிய விலையில் வசதிகளை கிடைக்க செய்வதற்காகவும், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள் இதன் பொருத்துதல் மற்றும் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்யும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னேறிய கணினிமய வளர்ச்சி மையம் (சி-டாக்) மொத்தம் 13 ஒப்பந்தங்களை இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் செய்துள்ளது.
2020 அக்டோபர் 12 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவிலேயே சூப்பர் கம்ப்யூட்டிங் பொருத்துதல் மற்றும் உற்பத்தியை செய்யும் வகையில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு சஞ்சய் சாம்ராவ் தொத்ரே, முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது தற்சார்பு இந்தியாவை குறிக்கிறது என்றார்.
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663952
*******
(Release ID: 1663952)
(Release ID: 1663978)
Visitor Counter : 157