பாதுகாப்பு அமைச்சகம்
ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனத்தால் கட்டப்படமைக்கப்பட்டுள்ள 44 பாலங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்
Posted On:
12 OCT 2020 12:44PM by PIB Chennai
மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளுக்கு நெருக்கமாக இருக்கும் முக்கியமான பகுதிகளை பாலங்கள் மற்றும் சாலைகளுடன் இணைப்பது புதிய சகாப்தத்தின் அடையாளமாக இருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்றைக்கு 44 முக்கிய நிரந்தர மேம்பாலங்களை நாட்டுக்கு அர்பணித்தார். இது தவிர அருணாசல பிரதேசத்தின் நெச்சிப்பு சுரங்க பாதைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த பாலங்கள் முக்கியத்துவம் வாய்ந்த உத்தியாக தொலைதூரங்களுடன் இணைப்பு ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த மேம்பாலங்கள் ஏழுமாநிலங்கள் /மத்தியபிரசேதங்களில் பரந்து விரிந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுடன் அரசு/ ராணுவ உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர், உத்தரகாண்ட்&சிக்கிம், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசத்தின் முதலமைச்சர்கள் மத்திய அமைச்சர் திரு.கிரண்ரிஜ்ஜு, புதுடெல்லியில் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமை ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நராவனே, முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் காணொலி காட்சியில் இணைந்திருக்கும்போது இந்த மேம்பாலங்களை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தமது உரையில், டிஜி மற்றும் எல்லை ரோடுகள் அமைப்பு நிறுவனத்தின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும், இந்த சாதனைகளை மேற்கொண்டதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். 44 பாலங்களை ஒரே நேரத்தில் அர்பணிப்பது என்பது தன்னளவில் ஒரு சாதனை என்றும் அவர் கூறினார். மேலும் ராஜ்நாத் சிங் கூறுகையில், “கொவிட் 19- எனும் சவாலான காலகட்டத்தில் மற்றும் எல்லைப் பதற்றங்களுக்கு இடையே, பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகளுடனான பிரச்னைகள் ஆகியவற்றை நாடு உறுதியுடன் எதிர்கொள்வது மட்டுமின்றி, பிரதமர் திரு.நரேந்திரமோடியின் திறன் மிக்க தலைமையின் கீழ் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் வரலாற்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663654
******
(Release ID: 1663654)
(Release ID: 1663669)
Visitor Counter : 297