ஆயுஷ்

தோல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஹோமியோபதி

Posted On: 12 OCT 2020 11:15AM by PIB Chennai

தோல் தொடர்பான வைரஸ் நோய்களின் பாதிப்புகளை குணப்படுத்துவதில் ஹோமியோபதி அதியங்களை நிகழ்த்துவதாக பல சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மையத்தின் ஆராய்ச்சி இதழான  ஆயுஹாம் வாயிலாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இந்த விவரம் விளக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி மையத்தின் பட்டமேற்படிப்பு பயிற்சியாளர் கவுசிக் பஹார் உடன் இணைந்து கல்கத்தா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி& மருத்துவமனையின் மருத்துவ பயிற்சித் துறையின் பட்டமேற்படிப்பு பயிற்சியாளர் மகாகஸ் மண்டல் மற்றும் ஆர்கானன் மருத்துவத்துறையின் ரீடர் சங்கீதா சாஹா ஆகியோரால் இந்த ஆய்வு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஐந்து வெவ்வேறு விதமான தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளுக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது குறிப்பிட்டத்தக்க பலன் கிடைத்தது. அதன் வாயிலாக, இது போன்ற தோல் குறைபாடுகளில் ஹோமியோபதி மருந்து நேர்மறையான விளவை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அனைத்து வயதினரையும் பாதிக்கும் உடல்நல பிரச்னை என்றவகையில் அடிக்கடி மற்றும் பல முறை தோல் நோய் ஏற்படுகிறது. உலகம் முழுவதும், உயிரிழப்பை ஏற்படுத்தாத நோய்களால் ஏற்படும் சுமைக்களுக்கான காரணியில் தோல்நோய் நான்காவது இடம் வகிக்கிறது

  மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663640

 

********

(Release ID: 1663640)



(Release ID: 1663660) Visitor Counter : 2862