சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

இந்தியாவிற்கு பெருமை; அரசால் பரிந்துரைக்கப்பட்ட 8 கடற்கரைகளுக்கும் சர்வதேச ப்ளூ ஃபிளாக் சான்றிதழ்: திரு பிரகாஷ் ஜவடேகர்

प्रविष्टि तिथि: 11 OCT 2020 5:34PM by PIB Chennai

இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலுள்ள மொத்தம் எட்டு கடற்கரைகளுக்கு சர்வதேச ப்ளூ ஃபிளாக் என்று அழைக்கப்படும் நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஷிவ்ராஜ்புர், டையுவின்  கோக்லா, கர்நாடகாவின் கசர்கோட் மற்றும் படுபித்ரி, கேரளாவின் கப்பட், ஆந்திரப் பிரதேசத்தின் ருஷிகொண்டா, ஒடிஷாவின் கோல்டன் (புரி) மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ராதா நகர் ஆகிய கடற்கரைகளுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக 'சர்வதேச சிறந்த வழிமுறைகள்' பிரிவில் இந்தியாவுக்கு  மூன்றாவது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் செய்தியில், மற்ற எந்த நாடுகளுக்கும் கிடைத்திறாத வகையில், ஒரே முயற்சியில்கடற்கரைகளுக்கு சர்வதேச விருது கிடைத்திருப்பது இந்தியாவிற்கு பெருமை தந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நீடித்த மேலாண்மைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663535---- 

----


(रिलीज़ आईडी: 1663578) आगंतुक पटल : 325
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam