விவசாயத்துறை அமைச்சகம்

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அத்தியாவசிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி கடந்த வருடத்தை விட 43.4% அதிகரித்துள்ளது

Posted On: 10 OCT 2020 3:32PM by PIB Chennai

வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் பயனளித்து வருகின்றன.

கொவிட்-19-க்கு இடையிலும், 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அத்தியாவசிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 43.4% அதிகரித்துள்ளது.

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அத்தியாவசிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு ரூபாய் 53626.6

கோடியாக இருந்தது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் இது ரூபாய் 37397.3 கோடியாக இருந்தது.

ஏப்ரல்-செப்டம்பர் 2019-20 உடன் ஒப்பிடும் போது, ஏப்ரல்-செப்டம்பர் 2020-21-இல் முக்கிய விளை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி அளவு வருமாறு:

வேர்கடலை (35 சதவீதம்), சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (104 சதவீதம்), கோதுமை (206 சதவீதம்), பாஸ்மதி அரிசி (13 சதவீதம்) மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி (105 சதவீதம்).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663362

--- 


(Release ID: 1663378) Visitor Counter : 169