நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி துறையில் ஆராய்ச்சி முயற்சிகளுக்கான இணைய தளத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியது

Posted On: 09 OCT 2020 5:32PM by PIB Chennai

நிலக்கரி துறையில் ஆராய்ச்சி முயற்சிகளுக்கான இணைய தளத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசிய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அனில் ஜெயின், "நிலக்கரித் துறை சார்ந்த அறிவையும், ஆராய்ச்சி பணிகளையும் ஊக்குவித்து மேம்படுத்த இந்த இணைய தளம் உதவும்," என்றார்.

 

இந்த இணைய தளத்தை உருவாக்குவதற்காக மத்திய சுரங்கங்கள் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர், நிலக்கரித் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பல்வேறு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் குறித்த இணைப்புகளை இந்த இணையதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

 

நிலக்கரி அமைச்சகத்தின் அறிவியல் ஆராய்ச்சி நிலைக்குழுவின் 56-வது கூட்டத்தின் போது இந்த இணைய தளத்தை (https://scienceandtech.cmpdi.co.in/) திரு அனில் ஜெயின் தொடங்கி வைத்தார்.

 

உற்பத்தி, உற்பத்தித் திறன், பாதுகாப்பு, நிலக்கரி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நிலக்கரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் மூலம் நிலக்கரி அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663177

                                                         -----


(Release ID: 1663274) Visitor Counter : 200