இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பாதுகாப்பு வழிமுறைகளில் திருப்தி அடைந்துள்ள வில்வித்தை வீரர் வீராங்கனைகள், தங்கள் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க ஆர்வமாக உள்ளனர்
प्रविष्टि तिथि:
09 OCT 2020 3:22PM by PIB Chennai
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டு பயிற்சிகளுக்கும், குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய வில்வித்தை வீரர்கள் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வீரர்களுக்குப் பொதுவான உடற்பயிற்சியுடன், யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்களுக்குத் திருப்திகரமாக இருப்பதாக வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தங்கள் பயிற்சியின் வேகத்தை அதிகப்படுத்த அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663086
-----
(रिलीज़ आईडी: 1663201)
आगंतुक पटल : 176