இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள வீரர்களின் இரண்டு மாத பயிற்சி முகாமிற்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல்

Posted On: 08 OCT 2020 7:36PM by PIB Chennai

ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும்  வீரர்களுக்கு வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை டில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் வளாகத்தில் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.

 

18 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 32 துப்பாக்கி சுடும் வீரர்கள், 8 பயிற்சியாளர்கள்மூன்று வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் 2 உதவியாளர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்வர். 1.43 கோடி ரூபாய் செலவில் இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.

 

 இதுகுறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒலிம்பிக் போன்ற முக்கிய விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு வீரர்களை தயார்படுத்த இதுபோன்ற பயிற்சி முகாம் மிக அவசியமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ள நோய் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பயிற்சி முகாமில் கடைபிடிக்கப்படும் என்று அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662829



(Release ID: 1662975) Visitor Counter : 133