நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நடைபெற்றுவரும் 2020- 21 கரீப் பருவத்தின் சந்தைப்படுத்துதலுக்கான கொள்முதல், கடந்த ஆண்டை விட இந்த வருடம் 33 சதவீதம் உயர்வு

சுமார் 1.7 லட்சம் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 20.37 லட்சம் மெட்ரிக் டன் நெல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

2020 கரீப் பருவத்தின் சந்தைப்படுத்துதலுக்கு பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒப்புதல்

Posted On: 08 OCT 2020 5:48PM by PIB Chennai

2020- 21 கரிப் பருவத்திற்கு தேவையான சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பருவத்திற்கான நெல் கொள்முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.7 லட்சம் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 20,37,634 மெட்ரிக் டன் நெல், 3847.05 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற கொள்முதலை விட 33 சதவீதம் அதிகமாகும்.

மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 30.70 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ,தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662784

--- 


(Release ID: 1662887) Visitor Counter : 119