அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தூய்மை இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் இலட்சியங்களை அடைவதற்கு கழிவுநீரை கையாள உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 08 OCT 2020 5:05PM by PIB Chennai

புதுதில்லியில் சராய் கலே கான் பகுதியில், சன் டயல் பூங்காவுக்கு அருகே பாராபுல்லா கால்வாய் அமைந்துள்ள இடத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை-பிராக் தூய்மை தொழில்நுட்ப மாதிரி பூங்காவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மற்றும் புவி அறிவியல் அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இன்று திறந்து வைத்தார்.

புது தில்லி துணைநிலை ஆளுநர் திரு அனில் பைஜால் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப், இதர அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தூய்மை இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் இலட்சியங்களை அடைவதற்கு கழிவுநீரை கையாள உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தன்னுடைய உரையின் போது டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

"கழிவு மேலாண்மையில் தூய்மையான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை குறித்த தகவல்களை பரவலாக்குவதில் முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் இந்த பூங்கா கவர்ந்திழுக்கும்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662750 

 ----- 



(Release ID: 1662797) Visitor Counter : 162