மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்

இதன் மூலம் ஒடிசா ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள்- கல்வி அமைச்சர்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2020 4:04PM by PIB Chennai

புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

ஒடிசாவின் நயாகர், மஹூல்டிஹா, ரைரங்பூர் ஆகிய இடங்களிலும் ராஜஸ்தானின் ஹனுமன்கரிலும், ஹரியானாவின் பரிதாபாதிலும் இந்தப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிகள் இதுவரை தற்காலிக கட்டிடங்களில் செயல்பட்டு வந்ததாகக் கூறினார். ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4000 மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளினால் பயனடைவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய இந்தப் பள்ளிகள் பசுமைக் கட்டிட விதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662735 

---- 


(வெளியீட்டு அடையாள எண்: 1662796) வருகையாளர் எண்ணிக்கை : 129
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi