வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு

Posted On: 08 OCT 2020 9:33AM by PIB Chennai

பிரதமரின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வரத்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகளாவிய நிதி மற்றும் முதலீட்டு தலைமை குறித்து, இந்திய வர்த்தக சபை அமெரிக்க உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடாக இருப்பதில், தைரியமாகவும், திறந்ததாகவும், மாற்றமாகவும் இருக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். “ ஒற்றுமை உணர்வுடன்  நாம் இணைந்து பணியாற்றலாம் என்றும், இந்திய மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது’’ என்றும் இந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் அமெரிக்க-இந்திய உறவு மேலும் வளரும் என குறிப்பிட்ட அமைச்சர் திரு பியூஷ் கோயல், இரு நாடுகளும் நீடித்த உறவில் இருப்பதாக தெரிவித்தார்தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளதாகவும், அதில் அமெரிக்காவும், இந்தியாவும், நீண்ட தூரம் பயணம் செய்யலாம் எனவும் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தியா- அமெரிக்கா இடையே கடந்த 2017ம் ஆண்டில் 126 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2019-ல் 145 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662602

 

*********

(Release ID: 1662602)


(Release ID: 1662619) Visitor Counter : 173