சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பட்டியலிடப்பட்ட ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கக் கூடிய ஏழு ரசாயனங்கள் மீதான தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 07 OCT 2020 5:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பட்டியலிடப்பட்ட ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கக் கூடிய ஏழு ரசாயனங்கள் மீதான தடைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், "இந்த முடிவின் மூலம் இந்தியா இதில் எவ்வளவு மும்முரமாக உள்ளது என்பதும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்பட்டால் நாம் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்பதும் தெளிவாகிறது," என்றார்.

 

சுற்றுப்புற சூழலில் இருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்களிடம் இருந்து உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே ஸ்டாக்ஹோம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

 

அமைச்சரவை இன்று அளித்துள்ள ஒப்புதல் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662362

-----


(Release ID: 1662520) Visitor Counter : 212