ரெயில்வே அமைச்சகம்

கொல்கத்தா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

இந்த மெட்ரோ திட்டத்தின் மொத்த தூரம் 16.6 கிலோமீட்டர்

திட்ட மதிப்பீடு ரூபாய் 8575 கோடி

प्रविष्टि तिथि: 07 OCT 2020 4:08PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்டப் பணிகளுக்கான தொகையை 8474.98 கோடி ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சால்ட் லேக்கிலிருந்து, ஹவுரா மைதானம் வரை 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு  இந்த ரயில் பாதை அமையவிருக்கிறது. இதற்காக கங்கை நதி மற்றும் ஹவுரா ரயில் நிலையங்களுக்கு அடியில் சுரங்க வழி பாதை தோண்டப்படும். நாட்டிலேயே முதன்முறையாக மிகப்பெரிய நதிக்கு அடியில் போக்குவரத்து சுரங்கப் பாதை தோண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ரயில் பாதை திட்டத்தின் மூலம், பயணிகளின் பயண நேரம் குறைக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். மேலும் மாசற்ற, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான போக்குவரத்தையும் இந்த திட்டம் உறுதி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662320 

----


(रिलीज़ आईडी: 1662363) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Telugu